welcome

சனி, 14 பிப்ரவரி, 2009

காலம் மாறினாலும் மறையாதது காதல்

காலம் மாறினாலும் மறையாதது காதல் 

நிறைவேறிய காதல்.

ஒரு மாலை இளவெயில் நேரம்...

ஷாஜஹான் மும்தாஜ்

ஆக்ரா அரண்மனை வளாகம், ஆண்டுதோறும் நடக்கும் சந்தை, ஒரு மாலை இளவெயில் நேரம் ஷாஜகான் சந்தைக்கு வந்தான்.  அங்கே ஒருகடையில் பேரழகியைச் சந்தித்தான். அவள் பெயர் அர்ஜுமான் பானு.  அவர்களுக்குள் அரும்பியது காதல்.

ஷாஜகான் தான் காதல் வயப்பட்டதை அப்பா ஜஹாங்கீரிடம் கூற அவர்கள் இருவருக்கும் திருமணம் இனிதே நிறைவேறியது. மன்னர், அர்ஜுமான் பானுவிற்கு மும்தாஜ்பேகம் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்.
 
ஷாஜகானுக்கும் மும்தாஜ்பேகத்திற்கும் சம வயது. ஆயினும் அவர்களின் மாறாத அன்புக்கு அடையாளமாக பதினான்கு குழந்தைகள் பிறந்தன. மன்னர் மத்திய இந்தியாவை நோக்கி படையெடுத்து சென்றபொழுதுதான் மும்தாஜுக்கு 14வது குழந்தை பிறந்தது.

 பிரசவத்தின்போது மும்தாஜ் ஜன்னி கண்டு இறக்க அவள் தந்த தீராத காதலின் நினைவாக, ஷாஜஹானால் கட்டப்பட்டது தாஜ்மஹால்.

சாவில் இணைந்த காதல்.

விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே!

அம்பிகாபதி அமராவதி.

கம்பனின் மகன், அம்பிகாபதி.

குலோத்துங்க சோழனின் குடும்பத்து இளவரசி, அமராவதி.

இருவருக்குள் காதல் எப்படி வந்தது?
 
கல்வியை கற்றுக்கொள்ள கம்பனின் வீட்டிற்க்கு வந்து சென்ற அமராவதி கம்பன் இல்லாத நாளில் அமராவதியிடம் காதலைக்கற்றுக் கொண்டாள். 

காதலை அறிந்த மன்னன் அம்பிகாவதியை கைது செய்து குற்றவாளியாக்கினான்.

சிற்றின்பம் கலக்காமல் நூறு பாடல்கள் பாடினால், அம்பிகாபதி கிடைப்பாள் என்று ஒட்டக்கூத்தர் ஒரு போட்டியை அறிவிக்க மன்னரும் அமராவதியும் ஒத்துக்கொள்ளுகிறார்கள். 

அமராவதி கடவுள் வாழ்த்தைச் சேர்த்து நூறு பாடல்களை பாடி முடிக்க அம்பிகாவதி அவனை ஆரத்தழுவிக்கொள்கிறாள்.

கடவுள் வாழ்த்தை சேர்க்காமல் 99 பாடல்கள் தான் பாடப்பட்டது என தீர்ப்பு வர குழோத்துங்கன் அம்பிகாபதிக்கு மரணதண்டனை விதிக்கிறான். அம்பிகாபதி இறந்த செய்தி கேட்டு ஓடிவந்து அவனது மார்பில் விழுந்து உடன் அமராவதியும் இறக்கிறாள்.

நட்பு காதலாக மாறிய கதை.

கவிதையே தெரியுமா என் காதல் நீதானடி!

லைலா மஜ்னு.

அரபு நாட்டில் சிறுகிராமம். அங்கு பள்ளியில் கல்விகற்கும்போது இருவருக்கும் தொடங்கிய நட்பு வயது ஏற ஏற காதலாக மாறியது. காதலை அறிந்த பெற்றோர் லைலாவின் கல்விக்கு தடைவிதித்தனர். ஒரு செல்வந்தனுக்கும் லைலவுக்கும் திருமணத்தையும் நடத்தி முடித்தனர்.
திருமணம் முடிந்தாலும் லைலாவுக்கும் செல்வந்தனுக்கும் இடையே எந்தவுறவும் ஏற்படவில்லை.
மஜ்னுவின் நினைவிலேயே வாழ்ந்த லைலா அவனைத்தேடி பல இடங்களில் அலைந்தாள். அவனை மீண்டும் சந்தித்தபோது அவனும் அவள் நினைவிலேயே இருப்பதை அறிந்த அவளுக்கு அவன் மீது இருந்த காதல் பலமடங்கு அதிகமானது.  இதை அறிந்த லைலாவின் பெற்றோர் லைலாவை வீட்டுக்காவலில் வைத்தனர். மஜ்னுவை மறக்க இயலாத லைலா அவனது நினைவாலேயே இறந்துபோனாள். அதை அறிந்து மஜ்னுவும் இறந்தான்.

பகையால் வளர்ந்த காதல்.

கண்ணாலே காதல் சொன்னாலே..

ரோமியோ ஜூலியட்.

இருவர் குடும்பத்திற்குள்ளும் பகை 

ஒருவிருந்தில் கலந்துகொண்ட ரோமியோவும் ஜூலியட்டும் அங்கு சேர்ந்து நடனமாடநேர்ந்தபோது ஏற்பட்ட நெருக்கத்தில் ஒருவர் மனதை ஒருவர் பறிகொடுத்தனர். அவர்கள் காதல் வளர்ந்தது. குடும்பப் பகை அவள் காதலுக்கு குறுக்கே வந்தது.  காதலுக்காக விஷம் குடித்ததுபோல் நடித்தாள் ஜூலியட். இதை நாடகம் என்று அறியாத ரோமியோ விஷம் அருந்தி இறக்க, அவன் குடித்து மீதி வைத்த விஷத்தினை அருந்தி உயிரைவிட்டாள் அவனது காதலி ஜூலியட்.

மனிதன் நாகரிகத்தைபற்றி அறிந்து கொள்ள தொடங்கியபோது ஆரம்பமானது இந்த காதல் உணர்வு.

இன்றுவரை காலங்கள் பல மாறினாலும் மறையாமல் வாழ்ந்தும் வளர்ந்தும் வருவது இந்த காதல்.

காதல் வாழ்க!  காதலர்கள் வாழ்க!! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக