welcome

ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

வாசித்ததில் நேசித்தது

காதல் என்பது யாதெனில்...


பரஸ்பரம் நேசிக்கப்படுதல் 
மட்டுமல்ல காதல்
விட்டுக் கொடுத்தலும் தான்

இருவருக்கிடையேயான ஈர்ப்பு
மட்டுமல்ல காதல்
இறக்கும் வரைக்கும்
ஒன்றாக இருத்தலும் தான்

கற்பனையில் சிறகடித்து பறப்பது
மட்டுமல்ல காதல்
கல்லறைவரை 
கைகோர்த்திருப்பதும் தான்

நமக்கு பிடித்தவளு(ரு)க்கு
நம்மை பிடித்தே ஆகணும்
என்பதல்ல காதல்

நமக்கு பிடித்தவள்(ர்)
எங்கேயும் எப்போதும்
நன்றாக வாழவேண்டும் என
எண்ணுவதே (தலை சிறந்த) காதல்

சேர்ந்திருப்பவர்கள் எல்லாம்
காதலில் ஜெயித்தவர்கள் அல்ல
பிரிந்திருப்பவர்கள் எல்லாம்
காதலில் தோற்றவர்களும் அல்ல
ஆம்,
பரஸ்பரம் நேசிக்கப்படுதல்
மட்டுமல்ல காதல்
விட்டுக் கொடுத்தலும் தான்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக