welcome

வியாழன், 12 மார்ச், 2009

காதலிக்கும்போது உடலுறவு தேவையா?

காதலிக்கும்போது உடலுறவு தேவையா?

 

காதலிக்கும் காலத்தில் காதலர்கள் உடலுறவில் ஈடுபடலாமா?

 

காதலர்களுக்கு இடையே நடக்கும் மாபெரும் யுத்தமே, இந்த சமாச்சாரத்தைப் பற்றியதுதான்.

 

இன்று-

 

காதலிக்கும் காதலர்கள் நிறையப் பேர், இனக்கவர்ச்சியை அடிப்படையாகக் கொண்டே காதலிக்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை.

 

சிலர் தங்கள் காம உணர்வைத் தணித்துக் கொள்ள காதல் என்ற போர்வையில் நாடக மாடி கில்லாடித்தனமாக தங்கள் காரியத்தை முடித்துக் கொள்வதுண்டு.  அதன் பிறகு அவளை வெறுத்து ஒதுக்குவதும், உனக்கும் எனக்கும் இனி சம்பந்தம் கிடையாது என விலக்கி விடுவதும் உண்டு.

இதன் காரணமாக பல்வேறு இடங்களில் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். SEX பற்றித் தெரியாத வயதில் அதில் தன் மனம் கவர்ந்தவனுக்காக ஈடுபட்டு அதன் காரணமாக கர்ப்பமுற்று... காதல் விவகாரம் என்பது மாறி நடத்தை கெட்டவள், கெட்டுப் போனவள், கற்பழிக்கப்பட்டவள், ஏமாற்றப்பட்டவள்... என எத்தனை களங்கங்களைச் சுமக்க வேண்டியுள்ளது.

 

இப்படிப்பட்ட சூழ்நிலை எந்தப் பெண்ணுக்கும் வரக்கூடாது என நாம் கடவுளை வேண்டிக் கொண்டாலும் ஆங்காங்கே இப்படிப் பட்ட சம்பவங்கள் நடந்து கொண்டேதான் இருக்கிறது.  பாதிக்கப்படும் பெண், தான் பாதிக்கப்படப் போகிறோம் என்பது தெரியாமலேயே பலிகடாய் அகிவிடுகிறாள்.

 

காதலனால் கைவிடப்பட்டவள்... என தினப் பத்திரிகைகளில் இரண்டு நாளுக்கு ஒரு தடவை பல்வேறு செய்திகளில் இரண்டு நாளுக்கு ஒரு தடவை பல்வேறு செய்திகள் வருவதை அனைவரும் அறிவர்.

தன் காதலனால் ஏமாற்றப்பட்டு, கர்ப்பமுற்ற பல பெண்கள் இதனால் தன் குடும்பத்துக்கும், தனக்கும் அவமானம் என் நினைத்து தற்கொலை முடிவுக்குச் செல்கிறார்கள்.  சில பெண்கள் போலீஸ், கோர்ட்டு என சென்று சட்டத்தின் உதவியை நாடுகிறார்கள்.  இன்னும் சில பெண்கள் தன் கர்ப்பத்தைக் கலைத்துவிட்டு ஒன்றும் நடவாதது போன்று இருக்கின்றனர்.

 

ஆனால் மேற்கண்ட முடிவை ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் எடுத்தாலும் இவர்கள் அனைவருமே

காதல் என்ற மாயத்தால் ஏமாந்தவர்களே!

 

இதுவரையில் சந்தோஷமான காதல் இதோ இப்போது நரகமாக தோன்றுகிறது.  ஒரு குடும்பத்தில் ஒரு பெண் இந்த வகையில் பாதிக்கப்பட்டால், ஒட்டு மொத்த குடும்பமும் தலை குனிந்து விடுகிறது.  தன் குடும்பத்துப் பெண்ணால் தன் குடும்பத்திற்கே அவமானமாகி விட்டதே என எண்ணி, பெற்றவர்கள் பலர் தற்கொலை செய்து கொண்ட செய்தியையும் கேள்விப்படுகிறோம்.

 

காதலிக்கும் பருவத்திலேயே காதலர்கள் செக்ஸில் ஈடுபடுவது என்பது மேலைநாட்டுக் கலாச்சாரம்.(அதுவும் ஒரு சில நாடுகளே) இந்தியாவை விட பல வகைகளிலும் கட்டுக்கோப்பான கண்டிப்பான கலாச்சாரத்தைப் பின்பற்றக்கூடிய நாடுகள் ஏராளம் உள்ளன.

 

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளில் காதலிக்கத் துவங்கும்போதே செக்ஸிலும் ஈடுபடுகின்றனர்.  அவர்களைப் பொறுத்தவரையில் காதல் என்பது செக்ஸோடு இணைந்தது.  காதலின் ஒரு அங்கமாக நாம் முத்தமிடுதலை நினைக்கும்போது, அவர்கள் செக்ஸை நினைக்கின்றனர். இத்தகைய மேலைனாட்டு கலாச்சாரம் நைஸாக நம் நாட்டிற்குள்ளும் ஊடுருவி, திருமணத்திற்கு முன்னதாக செக்ஸ்வாழ்க்கை அல்லது காதலிக்கும்போதே செக்ஸில் ஈடுபடுவது தவறில்லை என்ற எண்ணத்தை பெரும் அளவில் மனதில் உருவாக ஆரம்பித்துள்ளது.

 

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் அல்லது இளைஞிகள் கொடுத்து வைத்தவர்கள் என்றுதான் கூறவேண்டும். இன்று அவர்கள் சந்திப்பதற்கு நிறைய சந்தர்ப்பங்கள் சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ளன. கிராமமாக இருந்தாலும் நகரமாக இருந்தாலும் இன்று பெரும்பாலான பெண்கள் படிக்கப் போவது, வேலைக்குப்போவது என்பது சர்வ சாதாரணம். இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் அவர்கள் தங்கள் காதலனச் சந்திப்பதும் எளிதாகிறது.

 

காதலிக்கும் பருவத்தில் காதலர்கள் உடலுறவில் ஏன் ஈடுபடுகின்றனர் என்பதற்கு நிறைய காரணங்கள் உண்டு.

 

அனுபவித்துப் பார்க்க வேண்டும் அல்லது பரீட்சித்துப் பார்க்க வேண்டும் என்ற ஆவல்-

 

இயற்கையிலேயே காம உணர்ச்சி அதிகம் உள்ளதால்-

 

ஒரு தடவை மட்டும் தொட்டுவிட்டு பிறகு விட்டுவிடலாம் என்ற மனப்பாங்கு-

 

செக்ஸில் ஈடுபட்டால் அவள் முழுவதும் தனக்கே சொந்தமாகிவிடுவாள் என்ற தவறான நினைப்பு-

 

அது என்னவென்றுதான் பார்ப்போமே என ஜாலியாக ’என்ஜாய்’ பண்ணிபார்ப்பது-

 

தன் சோகத்திற்கு, இப்போது செக்ஸில் ஈடுபட்டால்தான் நிம்மதி இருக்கும் என செண்டிமெண்டாக நினைப்பது-

 

பிற காதலர்கள் செக்ஸில் ஈடுபட்டு சந்தோஷமாக இருக்கும் போது, நாம் மட்டும் ஏன் சந்தோஷமாக இருக்கக் கூடாது என்ற தவறான எண்ணம் தோண்றுவதால்-

 

அடிக்கடி தன்னை அந்த விசயத்திற்க்காக தன் காதலன் கட்டாயப் படுத்துகிறானே என எண்ணி மனமிரங்கி பெண்கள் ஒப்புக்கொள்வதால்-

 

எங்கே உடலுறவுக்கு ஒப்புக்கொள்ளவில்லையெனில் தன்னைவிட்டுப் பிரிந்து விடுவானோ என்ற பயத்தால்-

 

இதிலென்ன தவறு, என் மனசையே ஒப்படைத்த பிறகு  உடம்பு மட்டும் என்ன? என கேட்கும் மனப்பாங்குஉடையவர்களால்-

 

ஆக இப்படி பல காரணங்களால் காதலிக்கும் பருவத்தில் செக்ஸில் ஈடுபடுவது அவர்களுக்குள் அத்தியாவசியமாகி விடுகிறது.

 

ஆனால் காதலிக்கும் பருவத்தில் உடலுறவில் ஈடுபடுவது என்பது தவறான செயல்தான்.  இது அனைத்துக் காதலர்களுக்கும் தெரியும்.

 

இப்படி இப்ப்டித்தான் வாழ வேண்டும் என்ற வழி முறையை நம் முன்னோர்கள் மிக அற்புதமாக வகுத்திருக்கிறார்கள்.

 

காதல் என்பது மன ரீதியாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதே.  உடல் ரீதியாக புரிந்து கொள்வது அன்று.

 

காதலுக்குப் பிறகான திருமண சடங்கிற்குப் பிறகு உடலுறவில் ஈடுபடுவதே சாலச்சிறந்தது.

 

ஒருவேளை பல்வேறு காரணங்களால் உங்கள் காதல் வெற்றி பெறாமல் போய் வேறு ஒருவர் உங்களுக்கு வாழ்க்கைத் துணையாக அமைந்து விட்டால் ஏற்கனவே நீங்கள் செய்த தவறு காலம்பூரவும் உங்கள் மனதை அரித்துக் கொண்டே இருக்கும்  இதில் அதிகம் பாதிக்கப்படுவதும் பாதிப்புக்குள்ளாவதும் பெண்களே.  பல பெண்கள் இந்த சமாச்சாரத்தால் தங்கள் வாழ்க்கையையே சூன்யமாக்கிக் கொண்டிருக்கின்றனர்.

 

தன் மனதில் உள்ள பாரத்தை கணவனிடம் வெளிக்காட்ட முடியாமல் தவித்து விடுகின்றனர்.  ஒரே ஒரு தடவை செய்த தவறுக்கு காலம் பூரவும் மனதால் தண்டனையை அடைந்து வருகின்றனர்.

 

ஆக காதலிக்கும் முன்பாக உடலுறவை முற்றிலுமாகத் துறந்துவிடுங்கள்.

 

உண்மையான காதலர்களுக்கு உடல் இச்சையெல்லாம் இரண்டாம் பட்சம்தான் என்பதனை உணருங்கள்.

லவ்&லவ்லி என்றபுத்தகத்தில் வாசித்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக